நாடு முழுவதும் தற்போது வழங்கி வரும் 3ஜி சேவையை படிப்படியாக 4ஜி சேவையாக மாற்ற முடிவு செய்துள்ளதாக வோடாபோன் ஐடியா செல்போன் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பிறகு கடும் போட்டிகளை பிற செல்போன் நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் கடும் போட்டியை எதிர்கொண்ட வோடாபோன், ஐடியா நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளன.
இதையடுத்து தற்போது அந்நிறுவனம், அதிவேக டேட்டா சேவையை அளிக்கும் வகையில் 3 சேவை அனைத்தையும் படிப்படியாக 4ஜி சேவையாக மாற்ற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் 2ஜி சேவை மூலம் சந்தாதாரர்களுக்கு அடிப்படை குரல் அழைப்பு சேவை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.