பேஸ்புக் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அண்மையில் பேஸ்புக்கின் பங்கு மதிப்பு 6.5 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் 13 சதவீத பங்குகள் வைத்துள்ள மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் மட்டும் பேஸ்புக் பங்குகள் மதிப்பு கிடத்தட்ட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், உலகின் அதி பணக்காரர்களுக்கான கிளப்பில் அமேசானின் ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட்டின் பில் கேட்ஸை தொடர்ந்து மார்க்கும் இணைந்துள்ளார்.