அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை ஊழியர்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்ற பேஸ்புக் நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மிகக்குறைந்த அளவிலான ஊழியர்களுடன் அலுவலகங்கள் திறக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டு இறுதி வரை அலுவலகங்களை திறக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், 2021 ஜூலை வரை ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிப்பதாகவும், வீட்டு அலுவலக தேவைகளுக்கு இந்திய மதிப்பில் 75 ஆயிரம் ரூபாய் கூடுதலாக ஊழியர்களுக்கு வழங்குவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.