கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 42 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆட்டோ மொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள், தனிநபர் வாகனங்கள், டிராக்டர் என கடந்த மாதம் 9 லட்சத்து 84 ஆயிரத்து 395 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16 லட்சத்து 97 ஆயிரத்து 166 வாகனங்கள் பதிவாகியிருந்தன. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 42 சதவீதம் குறைந்துள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் பதிவு செய்யப்படும் டிராக்டர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 67.36 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிற நிலையில், பெரும்பாலானோர் விவசாயம் பக்கம் திருப்பியிருப்பதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.