உலகம் முழுவதும் பல்வேறு முக்கியத் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் நேற்று ஒரே நாளில் முடக்கப்பட்டன.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பெஸோஸ், உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பஃப்பட், மைக்கேல் ப்ளூம்பர், டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் ஆகியோர் உள்பட பலரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதில் ஒரே விஷயத்தை பலரும் கேட்பதுபோல அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ட்விட்டர் கணக்கில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருந்ததாகக் கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம், போலி ட்விட் கணக்குகளைக் கண்டறிந்து நீக்குவதாக உறுதியளித்துள்ளது.