கூகுள் பே மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய பணப் பட்டுவாடா கழகத்தின் வழிகாட்டுதலின்களின்படி, முழுமையாக பாதுகாக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், கூகுள் பே பயன்பாடு அரசால் அங்கீகரிக்கப்படாததால் அதன் மூலம் பரிவர்த்தணையின் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை, சட்டத்தின் கீழ் தீர்க்க முடியாது என சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறு என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூகுள் பே செயலி அங்கீகரிக்கப்படாதது அல்லது சட்டப்படி இணங்கவில்லை என ரிசர்வ் வங்கி இதுவரை குறிப்பிடவில்லை எனவும், முழுமையாக சட்டத்திற்கு உட்பட்டே கூகுள் பே செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.