லடாக் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 4 அல்லது 5 நாட்களில் இந்தியாவில் 40 ஆயிரத்தும் அதிகமான முறை இணையவழித் தாக்குதலை சீனா நடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகையத் தாக்குதல்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் வங்கிகள் தொடர்பாக இருந்ததாக மகாராஷ்டிர சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் செங்டு பகுதியில் உள்ள ஹேக்கர்கள் மூலம் சைபர் தாக்குதலை சீனா நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், செயற்கையாக உருவாக்கப்பட்ட இணையதளங்களின் மூலம் இந்தியாவில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய முயன்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடந்த தொடர் தாக்குதல்கள் பெரும்பாலும் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்க்கு இலவச சோதனை என்ற பெயரில் சைபர் தாக்குதல் இருக்கலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.