2019-20 நிதியாண்டின் கடைசி காலாண்டில் லாபம் 27.77 சதவிகிதம் குறைந்து விட்டதாக,நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
மொத்த வருவாய் இழப்பு 1322.3 கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம், முந்தைய நிதி ஆண்டின் இதே கால அளவில் 1830.8 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்ததாகவும் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் கொரோனாவால் வாகன விற்பனை முழுவதுமாக நின்று விட்ட நிலையில் 2019-20 நிதியாண்டுக்கான நிகர லாபம் 5677.6 கோடி ரூபாய் என்றும் இது அதற்கு முந்தைய நிதியாண்டு வருவாயான 7550.6 கோடியை விட 25.78 சதவிகிதம் குறைவு என்றும் மாருதி தெரிவித்துள்ளது.
வருவாய் குறைந்து விட்டதை அடுத்து பங்குதாரர்களுக்கு டிவிடென்ட் இனத்தில் பங்கு ஒன்றுக்கு 60 ரூபாய் என்ற அளவில் வழங்க மாருதியின் போர்டு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.