ஊரடங்கால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினருக்கு நிவாரணம் அளிப்பதற்கான நிதித் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துறையில் இயங்கி வந்த லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வேலை வாய்ப்புகளும் பறி போய் உள்ளது.
இந்த நிலையில் அதற்கு உயிரூட்டம் வகையிலான நிவாரண திட்டம் தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான இந்த திட்டம் பிரதமரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி கூறி உள்ளார்.
அதே போன்று இந்த துறையில் இயங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளும் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.