ஏப்ரல், மே மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்பைஸ் ஜெட் விமான நடவடிக்கைகள் துறை தலைவரான குர்சரண் அரோரா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 2020ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கான ஊதியம் விமானிகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், சரக்கு விமானத்தை இயக்குவோருக்கு மட்டும் அவர்கள் விமானத்தை இயக்கும் நேரத்துக்கான ஊதியம் மட்டும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்டிகோ விமான நிறுவனம் தனது விமானிகளுக்கு ஏப்ரல் மாத ஊதியம் அளிக்கப்படாது என அறிவித்திருந்தது.
ஆனால் மத்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து, அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது. இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தற்போது ஏப்ரல், மே மாத ஊதியம் வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.