ஊபர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த துவான் பாம் (Thuan Pham) அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
கொரோனா தொற்றால் உலக அளவில் மிகவும் பாதிக்கப்பட்ட ஊபரில் சுமார் 20 சதவிகிதம் என்ற அளவுக்கு ஆட்குறைப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 7ஆண்டுகள் ஊபரில் பணியாற்றிய துவான் பாம் ராஜினாமா செய்திருக்கிறார்.
மாற்று நபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஊபரின் தொழில்நுட்ப பிரிவினர் துவான் பாமின் பணிகளை கவனிப்பார்கள் என கூறப்படுகிறது. வியட்நாமைச் சேர்ந்த துவான் பாம் ஒரு அகதியாக 1979ல் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.
அங்கு பொறியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயன்சில் முதுகலை பட்டம் படித்தார். மே மாதம் 16 ஆம் தேதி முதல் தாம் ஊபரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.