கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் இந்த ஆண்டு ஐ.டி.சேவைகள் துறையில் யாருக்கும் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்காது என இன்போசிஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பை தெரிவித்திருக்கிறார்.
அத்துடன், ஐ.டி.யில் பணியாற்றும் முதுநிலை அதிகாரிகளுக்கு 20 முதல் 25 சதவிகித சம்பள குறைப்பு செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் 90 சதவிகித ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்ததன் மூலம் ஐ.டி. நிறுவனங்கள் பாராட்டத்தக்க செயலை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பினாலும் 25 முதல் 30 சதவிகித ஐ.டி.ஊழியர்கள்சுழற்சி முறையில் வீடுகளில் இருந்தே பணியை செய்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.டி.துறையில் ஆட்குறைப்பு நடக்கும் என தாம் நினைக்கவில்லை என்றும் மோகன்தாஸ் பை தெரிவித்திருக்கிறார்.