செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

40 சவரன் - 2 கிலோ வெள்ளி வீடு வீடாய் கொள்ளையடித்த அமாவாசை பிசினஸ் மேக்னட் ..! கோவிலில் கும்பிட்டு கைவரிசை

Dec 18, 2024 12:16:04 PM

எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன்பாக பூஜை செய்து தொடங்குவது போல, கன்னியாகுமரியில் கோவிலில் உருக்கமாக சாமி கும்பிட்டு அடுத்தடுத்து 8 வீடுகளில் நகை மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளிச்சென்ற அமாவாசை கொள்ளையனை 500க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் கைது செய்துள்ளனர் 

கோவிலில் உருக்கமாக வேண்டி பய பக்தியுடன் சாமி கும்பிட்டு விட்டு போகிறாரே.. இவர் தாங்க கடந்த 6 மாதங்களாக போலீசாரை அலையவிட்ட அமாவாசை திருடர் சுந்தரராஜர்..!

காவி வேட்டி , கசங்கிய சட்டை கையில் ஒரு கட்டப்பை இது இவரது அடையாளம்.. அமாவாசை இருட்டில் வேட்டையை தொடங்கும் இவர் ஆளில்லாத வீடுகளை கண்டால் போதும் கையோடு எடுத்து வந்திருக்கும் மங்கி குல்லாவை மாட்டிக் கொண்டு களவு செய்ய களத்தில் இறங்கி விடுவார்..

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஜூலை 8ந்தேதி இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் கைவரிசை காட்டிவிட்டு 3 வது வீடுகளுக்குள் புகுந்து அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி உள்ளார்

அடுத்த ஆமாவாசை இரவு நித்திரவிளை பகுதியில் பங்களா உள்ளிட்ட 8 வீடுகளுக்குள் கைவரிசை காட்டி இருக்கிறார். பங்களா வீட்டில் அனைத்து இடங்களில் சிசிடிவி பொறுத்தப்பட்ட நிலையில் எங்கேயும் தனது கைரேகை பதிந்து விடக்கூடாது என்று கையில் உள்ள துணி ஒன்றை வைத்தெ அனைத்து பொருட்களையும் தொட்டு எடுத்துள்ளார்

சிறிய அளவிலான வாயில் டார்ச் லைட்டை கவ்விக்கொண்டு , கதவின் அடிப்பகுதியை காலால் மிதித்து தள்ளிக்கொண்டே, கடப்பாரையில் நெம்பி பூட்டப்பட்ட கதவை எளிதாக திறந்து படுக்கை அறைக்குள் செல்லும் சுந்தரராஜர், 40 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி கட்டப்பையில் போட்டு தப்பி உள்ளார்

கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிரமாக தேடியும் எந்த துப்பும் துலங்கவில்லை.

வீட்டில் இருந்து வெளியே சென்ற கொள்ளையன் ஊரை விட்டு வெளியே போனது எப்போது ? என்று போலீசாரால் கண்டு பிடிக்க இயலவில்லை. சிறப்பு தனிப்படைகளை அமைத்து அமாவாசை கொள்ளையனை தீவிரமாக தேடிய போலீசார், கொள்ளையன் எங்கிருந்து வந்தான் என்பதை சிசிடிவி காட்சிகளின் மூலம் ஆய்வு செய்தனர். இரவில் கடையில் டீ குடித்து விட்டு ஊருக்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையன் கோவிலில் சாமிகும்பிட்டு விட்டு தனது திருட்டு வேலையை செய்ததை கண்டுபிடித்தனர்.

பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பேருந்தில் ஏறி கேரளாவுக்கு செல்வது தெரியவந்தது. அங்கிருந்து ரெயில் மூலமாக கோவைக்கு தப்பிசென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். 500க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளின் உதவியால் கோவையில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் மதுரையை சேர்ந்த அம்மி கொத்தும் தொழிலாளியான சுந்தர்ராஜுக்கு மிக்ஸி வருகையால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த தொழிலை கைவிட்டு பூட்டிய வீடுகளில் களவு எடுக்கும் தொழிலை கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருவதாக தெரிவித்த சுந்தர்ராஜ், திருடிய பணத்தில் கார், லாரி, சரக்குவாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்க்ளை வாங்கி வாடகைக்கு விட்டு சொந்தமாக டிரான்ஸ் போர்ட் பிசினஸ் செய்து வருவதாகவும், பங்களா போல வீடு ஒன்றை கட்டிவருவதாகவும் போலீசில் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து 40 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப்பொருட்களை குளச்சல் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையின் போது ஊருக்குள் வந்து திருடிவிட்டு எந்த வழியாக வெளியே போனாய் என்று போலீசார் கேட்டதற்கு, தான் எங்கு திருடினாலும் அருகில் உள்ள புதரில் பதுங்கி இருந்து விட்டு பகல் வேளையில் ஜன நடமாட்டம் அதிகமாக தொடங்கியதும் சாதாரணமாக நடந்து சென்று விடுவேன் என்று கூறி போலீசாரை மிரள விட்டிருக்கிறார் அமாவாசை திருடர் சுந்தரராஜர்..!

 


Advertisement
பை.. பைக்குள்ள பை.. எத்தனை பை..? திருட்டு சுந்தரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த பெண் பயணிகள்..! அரசு பேருந்தில் தரமான சம்பவம்
ரெட்டை நாக்கு.. நீல கண்கள்.. உடலெல்லாம் விசித்திர டாட்டூ.. இன்ஸ்டா ஏலியன் சிக்கியது எப்படி ? மனித உடலில் மாடிபிகேசனாம்..!
ஆசையோடு ஆபீஸ் போனாப்பா.. சாலையில் கிடந்த மண்ணால்... தலை நசுங்கி சிதைந்த கொடுமை..! அடுத்தடுத்த உயிர் பலி - கலெக்டர் எச்சரிக்கை
சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் விற்பதா ?.. பெண் அதிகாரி திடீர் ரெய்டு..! கேள்விகளால் மடக்கிய வியாபாரிகள்
பக்கத்து வீட்டில் பயங்கரன் சிறுவன் படு கொலையில் ஆட்டோ டிரைவர் சிக்கியது எப்படி? சினிமாவை மிஞ்சும் வகையில் துப்பறிந்த போலீஸ்
ரியல் புஷ்பா.. பச்ச புள்ளப்பா.. அப்பா கூட தான் வருவேன்.. அப்பாவை இறக்கி விட்ட போலீஸ்..! அல்லு அர்ஜூன் கைதுக்கு வலுக்கும் கண்டனம்..
தார் வச்சிருகேன்ல.. தண்ணீரில் சும்மா சர்ர்ன்னு போயிருவேன்.. தள்ளுமாடல் வண்டியான சோகம்..! அப்ப சொன்னதெல்லாம் பொய்யா..?
பெத்தவ இப்படி துடிக்கிறனே.. நீதி வாங்கி கொடுங்களேன்.. தாயின் விபரீத முடிவால் அதிர்ச்சி..! சிறுவனின் உயிரிழப்புக்கு என்ன காரணம் ?..
வங்கி ஊழியர் கடத்தல் கண்ணை கட்டி சிறைவைத்து நகத்தை பிடுங்கி கொலை..! எக்ஸ் மிலிட்டரியின் எக்ஸ்ட்ரீம் சித்ரவதை..
அப்பா திருடனா இருக்கலாம்.. ஆனால் அவரு புள்ள தங்கமுங்க... நகை பறித்த ஆட்டோ ஓட்டுனர்..! போலீசில் பிடித்துகொடுத்த மகன்..

Advertisement
Posted Dec 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பை.. பைக்குள்ள பை.. எத்தனை பை..? திருட்டு சுந்தரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த பெண் பயணிகள்..! அரசு பேருந்தில் தரமான சம்பவம்

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ரெட்டை நாக்கு.. நீல கண்கள்.. உடலெல்லாம் விசித்திர டாட்டூ.. இன்ஸ்டா ஏலியன் சிக்கியது எப்படி ? மனித உடலில் மாடிபிகேசனாம்..!

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆசையோடு ஆபீஸ் போனாப்பா.. சாலையில் கிடந்த மண்ணால்... தலை நசுங்கி சிதைந்த கொடுமை..! அடுத்தடுத்த உயிர் பலி - கலெக்டர் எச்சரிக்கை

Posted Dec 16, 2024 in Big Stories,

சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் விற்பதா ?.. பெண் அதிகாரி திடீர் ரெய்டு..! கேள்விகளால் மடக்கிய வியாபாரிகள்

Posted Dec 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பக்கத்து வீட்டில் பயங்கரன் சிறுவன் படு கொலையில் ஆட்டோ டிரைவர் சிக்கியது எப்படி? சினிமாவை மிஞ்சும் வகையில் துப்பறிந்த போலீஸ்


Advertisement