செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

வங்கி ஊழியர் கடத்தல் கண்ணை கட்டி சிறைவைத்து நகத்தை பிடுங்கி கொலை..! எக்ஸ் மிலிட்டரியின் எக்ஸ்ட்ரீம் சித்ரவதை..

Dec 12, 2024 09:01:24 PM

கடந்த 6ந்தேதி காலை சின்னாளப்பட்டி காவல் நிலையத்துக்கு கைக்குழந்தையுடன் ஓடிச்சென்ற பெண் ஒருவர், தனது கணவர் பாலமுருகனை காணவில்லை என்று புகார் அளித்தார். கடந்த 5 நாட்களாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் , தோமையார் புரம் அருகே கண்கள், கைகால்கள் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சாலையோர புதரில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்..!

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெரிய குளத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கிக் கொடுக்கும் ஊழியராக பணியில் இருந்த பாலமுருகன். அந்த வேலையை விட்ட கையோடு மனைவி குழந்தைகளுடன் சின்னாளப்பட்டிக்கு இடம் பெயர்ந்தார். இங்கு வந்த பின்னர் ஆன் லைன் டிரேடிங்க்கில் ஈடுபடுவதாக கூறி தனக்கு அறிமுகமானவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 3 மாதங்கள் கழித்து பணம் இரட்டிப்பாக்கி தரப்படும் என்று கூறி பணம் பெற்ற நிலையில் 3 மாதங்களாக சொன்னபடி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது . இது தொடர்பாக பாலமுருகனிடம் ஆன் லைன் டிரேடிங்கிற்காக பணம் கொடுத்த முன்னாள் ராணுவ வீரரான ஜஸ்டின் ராஜா வீடு தேடி மிரட்டிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது பாலமுருகன் சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்ட சினிமாவை மிஞ்சும் சம்பவம் அம்பலமானது.

ஜஸ்டின் ராஜா மற்றும் அவரது உறவினர்கள் பாலமுருகனிடம் மொத்த 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். அவர் பணம் இரட்டிப்பாக்கி கொடுக்காத நிலையில் தாங்கள் கொடுத்த பணத்தையாவது திரும்ப தறுமாறு கேட்டுள்ளனர். பணத்தை கொடுக்க மறுத்த பாலமுருகன் ஒரு கட்டத்தில் அவர்களின் செல்போன் அழைப்பை எடுப்பதையும் தவிர்த்துள்ளார்.

இந்த நிலையில் 5ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலமுருகனை காரில் ஏற்றி கண்ணைக் கட்டி தூக்கிச்சென்று ஒரு வீட்டில் சிறைவைத்து அடித்து உதைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவரது கை விரல் நகங்களை கட்டிங் பிளேடால் பிடுங்கி எறிந்து சித்தரவதை செய்ததாக கூறப்படுகின்றது.

அப்படி இருந்தும் ஆன் லைன் டிரேடிங்கில் மொத்த பணமும் நட்டம் ஆகி விட்டதாக கூறிய பாலமுருகன் பணத்தை கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகின்றது. தங்கள் பணம் திரும்பக்கிடைக்காது என்ற விரக்தியில் இரு தினங்களுக்கு முன்பு பாலமுருகனின் கழுத்தை அறுத்து புதரில் வீசிச்சென்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்

இந்த கொலை தொடர்பாக ஜஸ்டின்ராஜா, சார்லஸ், பன்னீர் செல்வம் , முத்துக்குமார், திருப்பதி , கார்த்திக்குமார்,விக்னேஷ்ஆகிய 7 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் டிரேடிங் மோசடியில் ஈடுபட்டதால் முன்னாள் வங்கி ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
பெத்தவ இப்படி துடிக்கிறனே.. நீதி வாங்கி கொடுங்களேன்.. தாயின் விபரீத முடிவால் அதிர்ச்சி..! சிறுவனின் உயிரிழப்புக்கு என்ன காரணம் ?..
அப்பா திருடனா இருக்கலாம்.. ஆனால் அவரு புள்ள தங்கமுங்க... நகை பறித்த ஆட்டோ ஓட்டுனர்..! போலீசில் பிடித்துகொடுத்த மகன்..
முனகல் சத்தம் கேட்ட திசையில் உயிருக்கு போராடிய பெண் வசமாக சிக்க வைத்த கருகமணி..! கொலையாளி சிக்கியது எப்படி
சட்டையை கழற்றி போர் பைக் டாக்ஸியால் வீதிக்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள்..! பைக் டாக்ஸியை ஆதரிக்கும் இளசுகள்
தி. நகர் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணியில் புழு கிடந்ததாக ஓட்டலில் வாடிக்கையாளர் ஆவேசம்..! ஆய்வு செய்து ஓட்டலை மூடிய அதிகாரிகள்
“பெத்தராயுடு” வீட்டு வாசலில் போராட்டம் நடத்திய மகன் குடும்ப சொத்துக்காக அடிதடி ..! செய்தியாளர் மீது கடும் தாக்குதல்
தமிழ் புலியின்.. தந்திரம் வீணானது... அந்த “முடி”யையா.. எடுத்துப் போட்ட ?! “பரோட்டாவில் முடி ..” சிக்கியது எப்படி ? சேட்டையை காட்டிக் கொடுத்த சிசிடிவி..!
“கண்ணு தெரியலன்னா என்ன ? பொண்ணு அழகாயிருக்கு..” இப்படியும் ஒரு கொடுமைக்காரனா..?! உடலெல்லாம் சூடு.. பெண் பலியான மர்மம்..
லெபனான், ஈரானை அடுத்து சிரியாவில் போர்.. பற்றி எரியும் கிளர்ச்சி- எண்ணெய் ஊற்றுவது யார்? மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..
முதலிரவு அறையில் மாப்பிள்ளை.. செல்போனை ஆய்வு செய்த மணமகள்.. சாட்டிங் ஹிஸ்டரியால் ரிஸ்க்கான LIFE..! மறுவீடு சாப்பாடு ஜெயிலிலே..!

Advertisement
Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெத்தவ இப்படி துடிக்கிறனே.. நீதி வாங்கி கொடுங்களேன்.. தாயின் விபரீத முடிவால் அதிர்ச்சி..! சிறுவனின் உயிரிழப்புக்கு என்ன காரணம் ?..

Posted Dec 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,