AMP
செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முனகல் சத்தம் கேட்ட திசையில் உயிருக்கு போராடிய பெண் வசமாக சிக்க வைத்த கருகமணி..! கொலையாளி சிக்கியது எப்படி

Dec 12, 2024 08:03:13 AM

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த  பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு நகையை திருடிய 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

புளியஞ்சோலையில் பேன்சி கடை நடத்தி வரும் மைசூர் ரகுமான், ஜகுபர் நிஷா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் 45 நாட்களேயான பெண் குழந்தையும் உள்ளது.
இரவு ஜகுபர்நிஷா வீட்டில் இருந்து முனகல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ஜகுபர்நிஷா இடுப்பிற்கு மேலே 3 இடங்களுக்கு மேல் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கணவர் உள்பட சந்தேக நபர்களிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்திய போதும் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் கொலை நடந்த வீட்டின் தோட்டப் பகுதியில் ஒரு முக்கியமான தடயத்தை போலீசார் கைப்பற்றியிருந்தனர்
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முகமது அபு உஸ்மான் மட்டும் ஜகுபர்நிஷா இறந்த பிறகு அந்தப் பக்கமே வராமல் ஒதுங்கியே இருந்தது, உளவுத்துறை போலீசாருக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, முகமது அபு உஸ்மானை போலீசார் விசாரனைக்காக அழைத்து வந்து அவரது செல்போனை சோதனை செய்தனர். அதில் ஜகுபர்நிஷா வீட்டு தோட்டத்தில் கிடைத்த தடயங்கள், முகமது அபு உஸ்மான் ஏற்கனவே எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டிருந்த படங்களில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து முகமது அபு உஸ்மானை கைது செய்த போலீசாரின் விசாரணையில், சம்பவத்தன்று மாலை மதுபோதையில் ஜகுபர் நிஷா வீட்டுப் பக்கமாக சென்ற போது அவர் மட்டும் தனியாக நிற்பதை முகமது அபு உஸ்மான் பார்த்து எதோ ஒன்றை சொல்லி சமாளித்துக்கொண்டே வீட்டிற்குள் சென்று ஜகுபர்நிஷா அணிந்திருந்த கருகமணியை அறுத்துள்ளார். அறுந்த கருகமணி கீழே சிதறியுள்ளது. அப்போது ஜகுபர்நிஷா கத்தியதால் அவரது பின்னால் இருந்து அவரது வாயைப் பொத்திக் கொண்டு கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் சத்தம் குறைந்து மயக்கமடைந்ததும் தப்பி ஓடிவிட்டார். ஓடும் பதற்றத்தில் அவர் சில கருகமணிகளைபோட்டுவிட்டு சென்றுள்ளார். வெளியூர் சென்றால் மற்றவர்களுக்கு தன் மீது சந்தேகம் வரும் என்பதால் வெளியூர்களுக்கு செல்லாமல் வெளியிடங்களுக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதே நேரத்தில் ஜகுபர்நிஷாவின் உறவினர்கள், அவரது கணவர் மீதே சந்தேகம் எழுப்பியதால் நம்மை போலீசார் பிடிக்கமாட்டார்கள் என்று கவலையில்லாமல் இருந்துள்ளார். ஆனால், அவசரத்தில் அவர் விட்டுச் சென்ற தடயம் அவரை காட்டிக் கொடுத்துவிட்டது என்பது தெரியவந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை எடுத்துத் தருவதற்காக ஆற்றுப்பாலத்திற்கு அழைத்துச்சென்ற போது, முகமது அபு உஸ்மான் தப்ப முயன்றதால் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. நகைக்காக பச்சிளங்குழந்தையின் தாயை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Advertisement
ரியல் புஷ்பா.. பச்ச புள்ளப்பா.. அப்பா கூட தான் வருவேன்.. அப்பாவை இறக்கி விட்ட போலீஸ்..! அல்லு அர்ஜூன் கைதுக்கு வலுக்கும் கண்டனம்..
தார் வச்சிருகேன்ல.. தண்ணீரில் சும்மா சர்ர்ன்னு போயிருவேன்.. தள்ளுமாடல் வண்டியான சோகம்..! அப்ப சொன்னதெல்லாம் பொய்யா..?
பெத்தவ இப்படி துடிக்கிறனே.. நீதி வாங்கி கொடுங்களேன்.. தாயின் விபரீத முடிவால் அதிர்ச்சி..! சிறுவனின் உயிரிழப்புக்கு என்ன காரணம் ?..
வங்கி ஊழியர் கடத்தல் கண்ணை கட்டி சிறைவைத்து நகத்தை பிடுங்கி கொலை..! எக்ஸ் மிலிட்டரியின் எக்ஸ்ட்ரீம் சித்ரவதை..
அப்பா திருடனா இருக்கலாம்.. ஆனால் அவரு புள்ள தங்கமுங்க... நகை பறித்த ஆட்டோ ஓட்டுனர்..! போலீசில் பிடித்துகொடுத்த மகன்..
சட்டையை கழற்றி போர் பைக் டாக்ஸியால் வீதிக்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள்..! பைக் டாக்ஸியை ஆதரிக்கும் இளசுகள்
தி. நகர் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணியில் புழு கிடந்ததாக ஓட்டலில் வாடிக்கையாளர் ஆவேசம்..! ஆய்வு செய்து ஓட்டலை மூடிய அதிகாரிகள்
“பெத்தராயுடு” வீட்டு வாசலில் போராட்டம் நடத்திய மகன் குடும்ப சொத்துக்காக அடிதடி ..! செய்தியாளர் மீது கடும் தாக்குதல்
தமிழ் புலியின்.. தந்திரம் வீணானது... அந்த “முடி”யையா.. எடுத்துப் போட்ட ?! “பரோட்டாவில் முடி ..” சிக்கியது எப்படி ? சேட்டையை காட்டிக் கொடுத்த சிசிடிவி..!
“கண்ணு தெரியலன்னா என்ன ? பொண்ணு அழகாயிருக்கு..” இப்படியும் ஒரு கொடுமைக்காரனா..?! உடலெல்லாம் சூடு.. பெண் பலியான மர்மம்..

Advertisement
Posted Dec 14, 2024 in இந்தியா,Big Stories,

ரியல் புஷ்பா.. பச்ச புள்ளப்பா.. அப்பா கூட தான் வருவேன்.. அப்பாவை இறக்கி விட்ட போலீஸ்..! அல்லு அர்ஜூன் கைதுக்கு வலுக்கும் கண்டனம்..

Posted Dec 13, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தார் வச்சிருகேன்ல.. தண்ணீரில் சும்மா சர்ர்ன்னு போயிருவேன்.. தள்ளுமாடல் வண்டியான சோகம்..! அப்ப சொன்னதெல்லாம் பொய்யா..?

Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெத்தவ இப்படி துடிக்கிறனே.. நீதி வாங்கி கொடுங்களேன்.. தாயின் விபரீத முடிவால் அதிர்ச்சி..! சிறுவனின் உயிரிழப்புக்கு என்ன காரணம் ?..

Posted Dec 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வங்கி ஊழியர் கடத்தல் கண்ணை கட்டி சிறைவைத்து நகத்தை பிடுங்கி கொலை..! எக்ஸ் மிலிட்டரியின் எக்ஸ்ட்ரீம் சித்ரவதை..

Posted Dec 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அப்பா திருடனா இருக்கலாம்.. ஆனால் அவரு புள்ள தங்கமுங்க... நகை பறித்த ஆட்டோ ஓட்டுனர்..! போலீசில் பிடித்துகொடுத்த மகன்..


Advertisement