திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் வட மாநிலத்தவருக்கு சொந்தமான கடையில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நகராட்சி அதிகாரிகள் வாகனத்தில் ஏற்றியதை கண்டித்து கடை ஊழியர் ஒருவர் வாகனத்தில் ஏறி ரகளையில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் , வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலை, பஜார் வீதி, அச்சரப்பாக்கம் சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்த கடைகளில்
நகராட்சி ஆணையாளர் சோனியா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர்
அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கைப்பற்றினர்
நகராட்சி அதிகாரிகள் பாக்குக்கார தெருவில் உள்ள பார்வதி எசன்ஸ் என்ற கடையில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கொண்டிருக்கும் போது கடையில் வேலை செய்யும் ஊழியரான ஜித்து என்பவர் நகராட்சி வாகனத்தில் ஏறி வாகனத்தை ஓங்கி அடித்து ரகளையில் ஈடுபட்டார்
அனைவரும் திகைத்து நிற்க நகராட்சி ஊழியர் ஒருவர், எங்க வந்து யாருகிட்ட பிரச்சனை பன்ற என்று விரட்டியதால் வாகனத்தில் இருந்து இறங்கி கடைக்குள் சென்று பதுங்கி கொண்டார்
நகராட்சி அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கடையில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். ரகளையில் ஈடுபட்ட ஜித்துவை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.