செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!

Nov 11, 2024 09:17:57 AM

சென்னை இராமாபுரத்தில் உள்ள இல்லத்தில், சனிக்கிழமை இரவு, குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, ஜாலியாக பேசிக் கொண்டிருந்தவர், ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தை காண எழுந்திருக்கவில்லை.

மாரடைப்பால் படுக்கையிலேயே, அவரது உயிர் பிரிந்திருந்தது. மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்த பின்னர், டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்றைய தென்காசி மாவட்டத்தின் ஒருபகுதியாகவும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட பகுதியாகவும் இருந்த கீழப்பாவூரில், 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி டெல்லி கணேஷ் பிறந்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு அவரது குடும்பத்தினர் இடம்பெயர, வளநாடு அவரது பூர்வீகமானது.

இந்திய விமானப்படையில் 1964 முதல் 1974 வரை பணியாற்றிய கணேஷ், தீராத கலையார்வத்தால், டெல்லியில் இயங்கிய, தக்சின பாரத நாடக சபாவில் இணைந்து, நாடக மேடையேறினார். பின்னர், விமானப்படையில் இருந்து விலகி, காத்தாடி ராமமூர்த்தியின் நாடக குழுவில் இணைந்து, டவுரி கல்யாணம் என்ற நாடகத்தில் குசேலராக நடித்து புகழ்பெற்றார். இவரது நடிப்பை பார்த்த இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், 1977ல் வெளிவந்த தனது பட்டண பிரவேசம் திரைப்படத்தில் வாய்ப்பளிக்க டெல்லி கணேசின் திரைப்பயணம் தொடங்கியது.

கமல்ஹாசனின் 100ஆவது படமான ராஜபார்வையில், முதன்முதலில் கமலுடன் இணைந்து நடித்த டெல்லி கணேஷ் காம்பினேசன், கடந்த ஜூலையில் வெளியான இண்டியன்-2 படம் வரை தொடர்ந்தது. அந்த படமே டெல்லி கணேசின் கடைசி படமாகவும் அமைந்தது.

நாயகன் திரைப்படத்தில் மும்பை தாதாவாக நடித்த கமலுடன், போட்டிப் போட்டு நடித்து, பட்டணம் மட்டுமின்றி பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானவர் டெல்லி கணேஷ்......

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் சார்பாக, அண்மையில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியோடு, அவரது திரைப்பயணம் குறித்த காட்சிகள் அடங்கிய காணொலியை, நடிகர் சங்கம் வெளியிட்டு, புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

80களில் கொடிகட்டிப் பறந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் மட்டுமின்றி, தற்போது ஸ்டார்களாக திகழும், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்திருப்பதோடு, இறுதிவரை பிசியான நடிகராகவே இருந்தார், டெல்லி கணேஷ்.......

சிந்துபைரவி படத்தில், குடிப்பழக்கம் உள்ள மிருதங்க வித்வானாகவே வாழ்ந்து, படத்தின் நாயகனான சிவக்குமாரின் JKB கதாபாத்திரத்தையே தனது நடிப்பாற்றலால் மிரட்டியிருப்பார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருப்பதுடன், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் தமது பங்களிப்பை வழங்கி, சிறப்பான கலைச்சேவை புரிந்தவர், டெல்லி கணேஷ்....


Advertisement
ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?
அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்
காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்
சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ
தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!
டிராவல் பேக்கில் பெண்ணின் கால்கள்.. கவ்விப்பிடித்த நாய்..! மனைவியை பழி தீர்க்க இப்படியா ?..
உசிலை 96 வயதில் காலமான பாட்டியின் ஆசையை நிறைவேற்ற பேரன் பேத்திகள் செய்த ஏற்பாடு..!
இப்படி... பத்த வச்சிட்டியே பெருசு அமித்ஷா உருவ பொம்மைக்கு வைத்த தீயில் சிக்கிய சிறுத்தைகள்..! வர்ரது எக்ஸ்பிரஸ் ரெயிலாம்.. நிறுத்த முடியாதாம்..
காசிமா... நீ சூப்பர்மா கேரம் சாம்பியனான ஆட்டோ ஓட்டுனர் மகள்..! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
சப்புன்னு அறைவேன்.. ராசா.. சப்.. சப்புன்னு அறைவேன்.. கோவக்கார போலீசுக்கு ஷாக்..! தலைக்கவசம் போடலைன்னு அடிச்சா எப்புடி ?

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement