ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி உணவின்றி 2 நாட்களாக தவித்த தங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் உதவ மறுத்த நிலையில் புதுக்குடி கிராமத்து மக்கள் தங்களுக்கு உணவு அளித்து காப்பாற்றியதாகவும், ராணுவம் ஹெலிகாப்டரில் இருந்து போட்ட உணவுப் பொருட்கள் உடைந்து சேதமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்
ரெயில் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே தாமிரபரணியில் வெள்ளம் போவதாகவும், மின்சாரம் இன்றி ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டதாகவும், பயணிகளின் பாதுகாப்புக்கு ரெயில்வே நிர்வாகமோ, போலீசாரோ எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டிய கும்பகோணத்தை சேர்ந்த பயணி, புதுக்குடி மேலூர் மக்கள் கொடுத்த அரிசி, உள்ளிட்ட பொருட்களை வைத்து தாங்கள் 7 பேர் சமைத்து பயணிகளுக்கு வழங்கியதாக தெரிவித்தார்
ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் ராணுவத்தினர் 2 வது நாள் தங்களுக்கு மேலே இருந்து தூக்கிபோட்ட உணவுகள் உடைந்து வீணாகிப்போனதாக ஆதங்கப்பட்டார்
தங்களுக்கு உணவளித்த புதுக்குடி மேலூர் மக்கள் மட்டும் இல்லையென்றால் நாங்கள் மீண்டு இருக்க மாட்டோம் என்று தெரிவித்தார்