அதிசெயல்திறன் மிக்க ஏஎம்ஜி ரக கார்களை, மேட் இன் இண்டியா திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள சகன் தொழிற்பேட்டையில் உள்ள தனது கார் ஆலையில் 10 சொகுசு கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது.
இதே ஆலையில் இனி ஏஎம்ஜி கார்களும் அசெம்பிள் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மாடலாக ஏஎம்ஜி பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜிஎல்சி 43 4-மேட்டிக் கூபே கார், மேட் இண்டியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளதாகவும், விரைவில், இதற்கான பணிகள் தொடங்கும், விரைவிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.