ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, வங்கதேச அணி வெற்றிபெற்றது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 47.2ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. யாசவி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 88 ரன்கள் எடுத்தார்.
178 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு வங்கதேச அணி விளையாடியது. 54 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், மழை குறுக்கிட்டது.
30 பந்துகளுக்கு 7 ரன்கள் என்று வெற்றி இலக்கு குறைக்கப்பட்ட நிலையில், வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் முதன்முறையாக வங்கதேச அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.