கொரானா வைரஸை கட்டுப்படுத்த சீனாவுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
சீனாவின் ஹூபே மாகாணம் உகானில் இருந்து பரவிய கொரானா வைரஸுக்கு 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் சீன அதிபருக்கும், சீன மக்களுக்கும் தமது ஆதரவையும், கொரானா வைரஸால் பலியானோருக்கு தமது இரங்கலையும் மோடி தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ள இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். ஹூபே மாகாணத்தில் சிக்கியிருந்த 650 இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர ஏற்பாடு செய்ததற்கும் தனது நன்றியை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.,