தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார் என நடிகர் ரஜினிகாந்தை டி. ராஜேந்தர் மறைமுகமாக விமர்சித்தார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர், விளக்கில் விட்டில் பூச்சி விழுந்ததைப் போல் தர்பார் படத்தை விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டார்கள் என்றார்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாசைப் பார்க்க சென்ற விநியோகஸ்தர்கள் கத்தியை எடுத்துக்கொண்டா சென்றார்கள் என கேள்வி எழுப்பிய அவர், அவர்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும்படி கேட்டுக்கொண்டார்.