சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு எந்த காரணமும் இன்றி கடன் வழங்க வங்கிகள் மறுத்தால் அது குறித்து புகார் அளிக்க விரைவில் சிறப்பு மையம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து, சென்னையில் தொழில்துறையினருக்காக இன்று ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.
புகார் தெரிவிக்கும் போது அதன் நகலை சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கும் அனுப்ப வேண்டும் என அவர் கூறினார்.
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு முன் எப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எட்டு சதவிகித பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை எட்ட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.