செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை விசாரணை

Feb 05, 2020 06:45:41 PM

பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் தொடர்பாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விநியோகித்திருந்தது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், இன்று காலை 10 மணி முதல் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமையகம், வில்லிவாக்கம், தியாகராயநகர், நாவலூர், மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பிகில் படத்துக்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படும் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளரான அன்புச்செழியனுக்கு சொந்தமாக தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அன்புச்செழியனின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையொட்டி அந்த அலுவலகத்துக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த சோதனையின்போது, நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யிடம், கேரவேனில் வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர். நடிகர் விஜய் தனது காரில் முன்னே செல்ல வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்து செல்கின்றனர். 

இதனிடையே, மதுரை தெப்பகுளம் பகுதியிலுள்ள அன்புச்செழியனின் நண்பர் சரவணனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் காலை 11.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வருமான வரித்துறையினர் 7 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடக்கம்..
போதை பொருட்கள் வைத்திருந்ததாக தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.!
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது 491 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுனர் தப்பி ஓட்டம்
அ.தி.மு.க. நிர்வாகிக்கு வெட்டு, தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது..
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!
பிரியாணியில் புழு இருந்த விவகாரம் - உணவகத்திற்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை.!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் பையை திருடிச் சென்ற நபர் - சிசிடிவி காட்சி பதிவு
கொடைக்கானல் அருகே மன்னவனூர் கிராமத்தில் விநியோக்கப்பட்ட கருப்பு நிற குடிநீர் - மக்கள் குற்றச்சாட்டு
திருச்செந்தூர் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு என அறநிலையத்துறை அறிவிப்பு !!
நாகை-இலங்கைக்கு வாரத்திற்கு 5 நாள் கப்பல் இயக்கப்படும் - நாகை துறைமுகம்

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement