உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன.
வர்த்தக நேர முடிவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 917 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 789 புள்ளிகளாக இருந்தது.
டைடன் நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 7 சதவீதமும், அடுத்தபடியாக ஐடிசி, பஜாஜ் பினான்ஸ், ஹெச்டிஎப்சி, ஹீரோ மோட்டோகார்ப், டாட்டா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 3 முதல் 4 சதவீதம் வரையிலும் உயர்ந்தன.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 271 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 979 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. பட்ஜெட் தாக்கலுக்கு பிந்தைய மீட்சி, கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.