சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை, வருகிற வியாழக்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.
இன்றைய விசாரணையின்போது, பொதுநல பிரச்சினையாக கருதி சீராய்வு மனுக்களை விசாரிக்க, பல்வேறு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை சீராய்வு செய்ய 9 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படவில்லை என்றும், பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவே நிர்மானிக்கப்பட்டதாகவும், தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். சீராய்வு குறித்தோ, பொதுநல பிரச்சினையாக கருதுவது பற்றியோ, பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
5 நீதிபதிகள் அமர்வு முன்வைத்த 7 கேள்விகளை மையப்படுத்தியே விசாரிக்கப்படும் என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு, விசாரணையை வருகிற வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.