ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிச்சுற்றில், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரிய வீரரை வீழ்த்தி, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்.
மெல்போர்ன் நகரில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி, வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. வாகையர் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சும்((Novak Djokovic)), ஆஸ்திரிய வீரர் டோமினிக் திம்மும்((Dominic Thiem)) மோதினர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வாகையர் பட்டத்தை 7 முறை வென்று "ஆஸ்திரேலிய ஓபனின் ராஜா"வாக திகழும் நோவக் ஜோகோவிச்சும், 5ஆம் நிலை வீரரான டோமினிக்கும் மோதியதால், ஆட்டத்தில் அனல் பறந்தது.
இறுதியில், 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், நோவக் ஜோகோவிச் வெற்றிப்பெற்றார். இது, நோவக் ஜோகோவிச் வெல்லும், 8ஆவது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்.