கன்னியாகுமரி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த மோதலில் மீனவர் அணி மாநிலத் தலைவர் மண்டை உடைந்தது.
நாகர்கோவிலில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் எம்.பி. வசந்த குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்தநிலையில் கூட்டத்தில் எம்.பி.வசந்தகுமாருக்கு எதிராக காங்கிரஸ் மீனவர் அணி மாநிலத் தலைவர் சபின் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் மூண்டதில் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், இருபிரிவினரையும் விலக்கி அப்புறப்படுத்தினர். தாக்குதலில் சபின் உள்பட பலரும் காயமடைந்தனர்.