செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

வூகானில் இருந்து 324 பேர் வருகை - சிறப்பு முகாமில் வைத்து தீவிர கண்காணிப்பு

Feb 01, 2020 04:38:09 PM

சீனாவின் வூகானில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட 324 பேரும் மருத்துவ கண்காணிப்புக்காக 2 ராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

கொரானா வைரஸின் கோரப் பிடியில் சிக்கியுள்ள சீனாவின் வூகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக, ஏர்இந்தியா சிறப்பு விமானம் நேற்று அனுப்பப்பட்டது. அங்கு இருந்து 330 இந்தியர்களை விமானத்தில் ஏற்றிவர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அதில் 6 பேருக்கு காய்ச்சல் இருந்தது, வூகான் விமான நிலைய சோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களை விமானத்தில் செல்ல சீன அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, 3 சிறார்கள், 211 மாணவ-மாணவிகள் உள்பட, 324 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர்இந்தியா சிறப்பு விமானம், இன்று காலை 7.30  மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது. 324 பேரும் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் டெல்லியில் உள்ள, இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை முகாமுக்கும், ஹரியானாவில் மனேசரில் உள்ள ராணுவ முகாமுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த இரு முகாம்களிலும் 324 பேரும் 14 நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர். கொரானா வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொரானா வைரசின் மையமாக கருதப்படும் ஊகான் நகரில் எஞ்சியிருக்கும் இந்தியர்களையும் மீட்பதற்காக 2வது ஏர் இந்தியா விமானம் இன்று சீனா புறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தனஞ்செய் குமார், 2வது விமானம் இன்று நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் விமானத்தில் சென்ற அதே மருத்துவர்கள் குழுவுடன், மீண்டும் கேப்டன் அமிதாப் சிங் தலைமையில் மீட்புக்குழு இந்தப் பணியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது
இந்தியா உடனான நட்பு இஸ்ரேலுக்கு கிடைத்த வரம்.. ஐ.நா. மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு புகழாரம்
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.. கணக்கில் வராத ரூ.1.14 லட்சம் பறிமுதல்
ஆபரேஷன் அகழியில் சிக்கிய பெண்.. 70 சவரன் நகைகள், ரூ.19 லட்சம் பறிமுதல் செய்து போலீஸ் அதிரடி
நகராட்சி அலுவலக வளாகத்தில் போலீஸார் முன்னிலையில் அ.தி.மு.க கவுன்சிலர் மீது தாக்குதல்
நண்பன் மூலமாக ரூ.7000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது
பார்சல் ஏற்றிச் சென்ற வேனில் பயங்கர தீ விபத்து.. ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்..?
சமூக வலைத்தளத்தில் பழகிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த இளைஞர்.. கைது செய்த புதுச்சேரி சைபர் க்ரைம்
சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை.. கணக்கில் வராத ரூ.4.24 லட்சம் பறிமுதல்

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement