2 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 204 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 129 புள்ளிகளில் நிலை கொண்டது.
எப்எம்சிஜி, உலோகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.
வரும் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் 26 காசுகளாக இருந்தது.