கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை திமுக தலைவரும், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செந்தியம் பகுதியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் திருவீதியம்மன் குளத்தை தூர்வாரும் பணி மற்றும் ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் ஜவஹர் நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின், ரத்ததான முகாமில் பங்கேற்ற 124 இளைஞர்களுக்கு சான்றிதழையும் வழங்கினார்.