செங்கல்பட்டு அருகே பரனூர் டோல்கேட்டை தாக்கி சூறையாடியபோது, அலுவலகத்தில் இருந்த ரூபாய் 18 லட்சம் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 26 ந் தேதி இங்கு அலுவலர்களுக்கும், அரசு விரைவு பேருந்து நடத்துனர், ஓட்டுனர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சுங்கச்சாவடி அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது.
இதுதொடர்பாக டோல்கேட் ஊழியர்களான ராஜஸ்தான் மற்றும் உ.பி.யைச்சேர்ந்த குல்தீப் சிங், விகாஸ் குப்தா, செங்கல்பட்டைச் சேர்ந்த முத்து, மற்றும் பேருந்து ஓட்டுனர் நாராயணன், நடத்துனர் பசும்பொன் முடியரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.