செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஜூவல்லரி உரிமையாளரின் வீடு புகுந்து, சாவியை திருடி, நகைக் கடையில் கொள்ளை

Jan 28, 2020 12:43:44 PM

ஜூவல்லரி உரிமையாளரின் வீடு புகுந்து, சாவியை திருடிச் சென்று, நகைக் கடையை திறந்து 3 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற திருடனை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் பொன் விஜய். இவருக்கு மார்த்தாண்டம் பகுதியில் ஜெயஸ்ரீ ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில், பொன்.விஜய் வீட்டின் மாடிக் கதவை உடைத்து நேற்றிரவு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 65 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடிதுள்ளனர். வீட்டின் தரைதளத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அரவமில்லாமல் இந்த கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது.

பூஜை அறையில் இருந்த நகைக்கடையின் சாவியையும் திருடிச் சென்ற கொள்ளையர்கள், இரவோடு இரவாக மார்த்தாண்டத்தில் உள்ள ஜெயஸ்ரீ ஜூவல்லர்ஸ் நகைக் கடைக்கு சென்றுள்ளனர்.

நகைக் கடையை திறந்து, அங்கிருந்த சுமார் 3 கிலோ நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து பொன்.விஜய் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நகைக்கடையின் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி பதிவில் முகமூடி அணிந்த கொள்ளையன் நகைக் கடையில் கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ஏஞ்சல் சகிதமாக டிஎஸ்பி ராமசந்திரன், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

கடந்த டிசம்பர் மாதம் மார்த்தாண்டம் சிலங்கா ஜுவல்லரியில் இருந்து 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் வடமாநில கொள்ளைக் கும்பல் மார்த்தாண்டத்தில் தங்கி இருந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீடு மற்றும் நகைக் கடையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், விசாரணையில் முன்னேற்றம் ஏற்படடுள்ளது என்றும், நகைக்கடை உரிமையாளருடன் ஏதோ ஒருவகையில் தொடர்புடைய யாரோதான் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர் என சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே நடைபெற்ற நகைக்கடை கொள்ளைக்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கிறதா என்று விசாரணை நடைபெறுவதாகவும் எஸ்.பி. ஸ்ரீநாத் கூறினார்.

கொள்ளை சம்பவங்களை தடுக்க வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவற்றை மொபைல் செயலியுடன் இணைத்து நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது கண்காணிக்க முடியும் என்றும் எஸ்.பி. ஸ்ரீநாத் அறிவுறுத்தினார்.


Advertisement
பந்தயம் போட்டு இரவுநேரத்தில் சீறிப்பாயும் ஆட்டோக்கள் - உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது போலீஸில் புகார்.!
கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறி - 5 பேர் கைது.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
"தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது பா.ஜ.க அல்லாத கட்சிகளையே குறிக்கும்" - எடப்பாடி பழனிசாமி
சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் காவல் மையம் அமைக்க முடிவு

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement