குடியரசு தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் நடைபெற்ற கொடியிறக்கும் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.
வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ராணுவ வீரர்களும் காலையில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் மாலையில் கொடியிறக்கும் நிகழ்ச்சியும் தினமும் நடைபெறக் கூடியதுதான் என்ற போதும் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு முக்கியத்துவம் பெறுவதால் நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். மிடுக்கான நடையுடன் கம்பீரமாக வீரர்கள் அணிவகுத்தனர்.
இரு நாட்டு வீரர்களும் பங்கேற்ற அணிவகுப்புக்குப் பின்னர் கொடிகள் இறக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.