தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில், தூத்துக்குடி மேயர் பதவியை, பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து 2011ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அந்த ஒதுக்கீட்டு காலம் 2021 வரை உள்ள நிலையில் மேயர் பதவியை திடீரென பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கியது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் மனுதாரர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.