வருமான வரித்துறை வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி தொடர்ந்த மனுக்களை அவசர வழக்காக இன்றே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
முட்டுக்காட்டில் உள்ள சொத்துகளை விற்று பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நாளை ஆஜராகக்கோரி இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி இருவர் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பில் நீதிபதி சுந்தர் முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி சுந்தர், வழக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.