மக்களை சந்தித்து பேசுவதற்காக, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்தர் பிரசாத் சிங் உள்ளிட்டோர் ஜம்மு நகருக்கு சென்றனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் இப்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை விளக்கி கூறவும், அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆய்வு செய்யவும் மத்திய அமைச்சர்கள் 38 பேர் கொண்ட குழுவை காஷ்மீருக்கு அனுப்ப மத்தி உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து உள்ளது.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் ஜிதேந்தர் பிரசாத் சிங், அர்ஜூன் மேக்வால், அஸ்வினி சவுபே, ஸ்மிருதி இரானி ஆகியோர் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் போய்ச் சேர்ந்தனர். அவர்கள் 60-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வதோடு மக்களை சந்தித்து பேச விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.