வருமானத்தை மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை வேறு நீதிபதிக்கு மாற்ற, உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்திருக்கிறார்.
இதுதொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தபோது, வருமான வரிதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அந்நிறுவனத்திற்கு வழக்கறிஞராக, தற்போது நீதிபதியாக உள்ள அனிதா சுமர்ந்த் ஆஜராகி உள்ளதால் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்தார்.