தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேற்கொண்டு வரப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடி ரூபாயைக் கேட்டு ஒப்பந்ததாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு இயந்திரங்கள் பழுது நீக்குதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆயிரக்கணக்கான ஊழியர்களை நியமித்து தனியார் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக அனல் மின் நிலைய நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 மாத பில் தொகை மற்றும் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை வழங்கயதற்காக விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 9 மாத பில் தொகை என 100 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாகக் கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.