ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை அடுத்த தினமே சவரனுக்கு 726 ரூபாய் குறைந்து சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சரசரவென்று சரிந்து வருகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் 736 ரூபாய் குறைந்து சவரன் 30 ஆயிரத்து 440 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 805 ரூபாயாக உள்ளது.
24 கேரட் தங்கத்தின் விலை 70 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 997 ரூபாயாக விற்பனையாகிறது. இதனிடையே இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தன.
மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 634 .61 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 452புள்ளி 35 ல் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குசந்தை நிப்டி 190 புள்ளி 55 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 215 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.
எஸ்.பி.ஐ. , பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி,.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, மாருதி, ஏசியன் பெயின்ட், ரிலையன்ஸ் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 44 காசுகளாக உள்ளது
கச்சா எண்ணெயின் விலை சுமார் 4 சதவிகித சரிவை சந்தித்துள்ளது. ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்படுவதற்கு முன்பாக கச்சா எண்ணெய் எந்த விலையில் விற்கப்பட்டதோ, அதை விடவும் குறைவாக 65.44 அமெரிக்க டாலராக கச்சா எண்ணெய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா ஈரான் இடையே நிலவிய பதற்றம் குறைந்திருப்பது இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது
Watch More ON : https://bit.ly/35lSHIO