மேற்காசியாவில் உருவாகியுள்ள பதற்றத்தை தொடர்ந்து தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 176 ரூபாயாக விற்கப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 34 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 897 ஆக உள்ளது. தங்கம் அமெரிக்க டாலரின் மதிப்பில் இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த ஜூலையில் அன்று ஒரு டாலரின் மதிப்பு 68.79 ரூபாயாக இருந்தது, அது இப்போது 71.94 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதனால் அதிக விலை கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கச்சா எண்ணெய் விலை உயர்வும் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Watch More ON : https://bit.ly/35lSHIO
Read More : டிக்டாக் தில்லாலங்கடி கொலை..! காதல் முறிவால் விபரீதம்