தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தம் நாட்டின், பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டாலும், பெரும்பாலான மாநிலங்களில் பெரியளவில் பாதிப்பும் ஏற்படவில்லை. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன.
சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கில் செயல்படுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று, பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து, இன்று காலை முதல் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், கர்நாடகா மாநிலத்தில், வேலைநிறுத்தத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெங்களூருவில், அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள், வழக்கம்போல் இயங்குகின்றன. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயக்குகிறது. ஆம்புலன்ஸ் சேவையிலும் பாதிப்பில்லை.
இடதுசாரிகள் அதிமுள்ள மேற்குவங்க மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வேலைநிறுத்தத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஹவுராவில், தொழிற்சங்கத்தினர் ரயிலை மறித்ததால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர், திடீரென தாக்க கூடும் என்ற அச்சத்தால், அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், ஹெல்மெட் அணிந்தபடி, பேருந்தை இயக்கி வருகிறார்.
மேற்குவங் மாநிலத்தில், அரசு பேருந்து மீது கல்வீசித் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில், அரசு பேருந்து ஒன்று வந்தது. கூச் பிஹார் (Cooch Behar) பகுதியில், அதை மறித்து நிறுத்திய, ஒரு கும்பல், கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது.
மேற்குவங்க மாநிலத்தின் புர்துவான் (Burdwan) பகுதியில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், எஸ்.எஃப்.ஐ அமைப்பினருக்கும் இடையே, வேலைநிறுத்தம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியது. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.