கோவை ஐடி ஊழியருக்காக பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத் துப்பாக்கியையும் 6 குண்டுகளையும் பறிமுதல் செய்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் 3 பேரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஐடி ஊழியர் மணிகண்ட பிரபு, அவருக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்து உதவிய ஹரிஷ் ஸ்ரீ, குந்தன்ராஜ் ஆகியோர் மீதும் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.