சென்னை தாம்பரம் அருகே மெப்ஸ் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மெப்ஸ் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களைக் குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்து வந்த ராஜசேகரையும் அவனது நண்பன் மூர்த்தி என்பவனையும் கைது செய்து, அவர்களிடமிருந்து போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.