செங்கம் அடுத்த அந்தனூர் அருகே திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
பலத்த மழையால் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாணியம்பாடியில் இருந்து திருக்கோவிலூர் நோக்கிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.