நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே மழை காரணமாக இரவு நேரத்தில் கூரை வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கவியழகன் என்ற 13 வயது சிறுவன் உயிரிழந்தார்.
செம்பியன்மகாதேவி பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மகன் உயிரிழந்த நிலையில், தந்தை மற்றும் அவரது மகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக வேளாங்கண்ணி போலீசார் தெரிவித்தனர்.