புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அதிகாலை நேரத்தில் ஓட்டு வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார்.
கொடிவயல் கிழக்கு கிராமத்தை சேர்ந்த நாராயணனின் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் படுகாயமடைந்த இனியவள் என்ற சிறுமி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.