சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கல்லூரி மாணவன் மற்றும் பள்ளி மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோரை தனிப்படை கைது செய்துள்ளது.