சென்னை விருகம்பாக்கம் கால்வாயில் வெள்ளம் ஏற்படாத வகையில் 12 குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஆயிரத்து 700 கனஅடி நீர் செல்லக்கூடிய 18 மீட்டர் அகல கால்வாய்கள், 5 மீட்டராக சுருங்கி உள்ளதாக கூறும் மாநகராட்சி, அவற்றில் 800 கனஅடி நீர் மட்டுமே செல்வதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்காக சென்னை ஐஐடி உதவியுடன் அறிவியல் பூர்வ ஆய்வு துவங்கிய உள்ளது.