கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோமீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், மேம்பாலத்தில் கீழே உள்ள சாலையில் சென்ற கார் மீது கான்கிரீட் இடிந்து விழுந்தது.
இதில், கார் கண்ணாடி உடைந்து முன்பகுதி சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக காரில் இருந்தவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக, மேம்பால கட்டுமான ஒப்பந்ததாரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.